25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


58 வயதுக்கு மேல் வேலை இடம் , சமூகம், குடும்பம் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். மனம் வருந்த வேண்டாம்:
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

58 வயதுக்கு மேல் வேலை இடம் , சமூகம், குடும்பம் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். மனம் வருந்த வேண்டாம்:

58 முதல் 65 வயது வரை உங்கள் வேலை இடம் உங்களை விட்டு விலகும். நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றி பெற்றிருந்தாலும், (அ) அதிகாரம் கொண்டிருந்தாலும், ஒருநாள் சாதாரண மனிதராகவே பார்க்கப்படுவீர்கள். அதனால், உங்கள் பழைய பதவியோ, தொழிலின் பெருமையோ மாறாது என்று நினைத்து அவற்றில் பற்றிக் கொள்ளாதீர்கள்.

65 முதல் 72 வயது வரை, இந்த வயதில் சமூகமும் உங்களை விட்டு விலகத் தொடங்கும். உங்கள் நண்பர்கள், பழைய தொடர்புகள் குறைந்து, வேலை இடத்திலும் உங்களை அவ்வளவாக எவரும் நினைவில் கொள்ள மாட்டார்கள். "நான் ஒருகாலத்தில்..." என்று சொல்லாதீர்கள், காரணம் இன்றைய தலைமுறை அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தாதீர்கள் !

 72 முதல் 77 வயது வரை இந்தக் கட்டத்தில் உங்கள் குடும்பமும் நெருங்கியதாய் இருக்க முடியாது. உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும், பெரும்பாலும் நீங்கள் உங்கள் துணையோ (அ)தனியாகவோ இருப்பீர்கள். பிள்ளைகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வருவது ஒரு அன்பின் வெளிப்பாடு, அதனால் அவர்கள் அடிக்கடி வரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை பொறுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள்!

77 வயதுக்கு மேல்: இந்தக் கட்டத்தில் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். ஆனால் இதை ஒரு துன்பமாக நினைக்காதீர்கள், இது இயற்கையின் நடைமுறையாகும். ஒவ்வொருவரும் இதே பாதையை கடந்து செல்லவேண்டும்.எனவே, உங்கள் உடல் இன்னும் வலுவாக இருக்கும்போது, வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள்!

விளையாடுங்கள், விரும்பியதை செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். அன்பு நண்பர்களே, சகோதரர்களே, சகோதரிகளே,மேலே குறிப்பிட்ட விஷயங்கள்  உண்மையாகவே நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன.இதை எழுதியவருக்கு மனமார்ந்த நன்றி & பாராட்டுகள்!

58 வயதுக்குமேல்: நண்பர்கள்குழுவாகஉருவாகுங்கள். ஒருகுறிப்பிட்டஇடத்தில், ஒருகுறிப்பிட்டநேரத்தில்சந்தித்து,பழையநினைவுகளைபகிர்ந்துமகிழுங்கள். தொலைபேசியில் பேசிக் கொண்டு இருங்கள்.வாழ்க்கையை சந்தோஷமாக கழியுங்கள்.எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் !

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News